நத்தம் அருகே இளம்பெண் தற்கொலை

60பார்த்தது
நத்தம் அருகே இளம்பெண் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள எஸ். கொடை பகுதியை சேர்ந்த ராமராஜ் மகள் ஐஸ்வர்யா (20). புதன்கிழமை மாலை பெற்றோர் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை உறவினர்கள் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி