கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழா

56பார்த்தது
கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழா
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. உள்பிரகார சன்னதி முன்பாக உள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.

தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சுற்று வட்டாரங்களிலிருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி