நத்தம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

64பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கனரா வங்கி அருகே அழகேசன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளது. இங்கு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியை சேர்ந்த கருப்பையா (வயது 40) என்பவர் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலையில் ஹோட்டலுக்கு இட்லி தோசை உள்ளிட்டவைகள் சமைப்பதற்காக இரவில் மாவு அரைத்து வைக்கப்படுவது வழக்கம். இன்று வழக்கம் போல் கருப்பையா கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டு இருந்தார். நத்தம் பகுதியில் கனமழை பெய்ததால் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின்தடை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் மின்சாரம் வந்தபோது மாவு அரைப்பதற்காக கிரைண்டரில் கை வைத்தவுடன் மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரை மீட்ட நத்தம் போலீசார் உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி