நத்தத்தில் லாரி மோதி முதியவர் படுகாயம்

574பார்த்தது
நத்தத்தில் லாரி மோதி முதியவர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(67). இவர் தற்போது நத்தம்- ராக்காச்சிபுரத்தில் வசித்து வருகிறார். திங்கட்கிழமை நான்கு வழிச்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது கோவை நோக்கி சென்ற லாரி இவர் மீது மோதியதில் - கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நத்தம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :