மகளிர்சுய உதவிகுழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி

81பார்த்தது
கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர்களுக்கு போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் இரத்த சோகை இல்லாத கிராமமாக மாற்ற சிறப்பு பிரச்சாரம், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்திடவும் பாரம்பரிய உணவு வகைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் வட்டாரம், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது. ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 306 ஊராட்சிகளில் 09. 09. 2024 முதல் 12. 09. 2024 வரை நடைபெறவுள்ளது. வட்டார அளவிலான போட்டிகள் 14 வட்டங்களில் 16. 09. 2024 முதல் 20. 09. 2024 வரை நடைபெறவுள்ளது. கிராம ஊராட்சிகளில் வெற்றி பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வட்டார அளவில் நடைபெறும் ஊட்டசத்து போட்டிகளிலும், வட்டார அளவில் வெற்றி பெறும் மகளிர் சுய உதவிகுழுக்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையோர் ஆவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி