வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடும் போது, அவை உங்கள் உடலுக்கு அதிக ஆற்றலை தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றல், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவற்றின் கலவையை வாழைப்பழம் மற்றும் தயிர் தருகிறது. மேலும் இவை வயிற்றுப் பிரச்சனைகளை தீர்க்க வல்லது. இருப்பினும், வாழைப்பழங்கள் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிடும் முன்பு உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.