கின்னஸில் இடம்பெற்ற 6.74 அடி உயர ஐஃபோன்

67பார்த்தது
கின்னஸில் இடம்பெற்ற 6.74 அடி உயர ஐஃபோன்
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி யூடியூபரான அருண் ரூபேஷ் உலகின் மிகப்பெரிய ஐஃபோன் மாதிரியை உருவாக்கியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். MrWhoseTheBoss என்ற டெக் யூடியூப் சேனலை வைத்துள்ள இவர், 6.74 அடி உயரத்தில் IPHONE 15 PRO MAX-ன் மாதிரியை வடிவமைத்துள்ளார். 88 இன்ச் OLED திரையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஐஃபோனை உருவாக்க சுமார் ரூ.59 லட்சம் வரை செலவானதாகவும், ஓராண்டு எடுத்துக்கொண்டதாகவும் அருண் ரூபேஷ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி