அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் முக்கியஸ்தர்கள் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் செஞ்சியாருக்கு போதிய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதால், செஞ்சியார் விஜய் கட்சியில் இணைவது குறித்து பரிசீலனை செய்திருக்கிறார். தவெகவில் செஞ்சியார் இணையும் பட்சத்தில் அவருக்கு அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.