திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 50). இவர் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரின் கடைகளில் விற்பனைக்கு தேவையான ஆயத்த ஆடைகள் தயாரிப்பதற்காக வேலம்பட்டி கந்தசாமி நகரில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதில் விலை உயர்ந்த ஆடைகள் தயாரிக்கும் சுமார் 20 க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் கொண்டு ஆடைகள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டவுடன் இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு அதன் உரிமையாளர் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று அதிகாலை திடீரென அந்த கடையில் இருந்து புகை கட்டியபடி இருந்துள்ளது பின்னர் தீ மளமளவென பற்றி எறிய துவங்கியுள்ளது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நத்தம் தீயணைப்புத் துறையில் இருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் விலை உயர்ந்த இயந்திரங்கள் கம்ப்யூட்டர் லேப்டாப் மற்றும் சேலை சிறுவர்களுக்கான உடைகள் உள்ளிட்ட சுமார் 50 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.