அஞ்சுகுளிப்பட்டியில் மீன்பிடி திருவிழா

81பார்த்தது
அஞ்சுகுளிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டி கிராமத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் சங்கிலியான் கோவில் அணை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அணையில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் மீன் பிடி திருவிழா நடத்துவது வழக்கம். ஊர் சார்பாக சுமார் 25 ஆயிரம் மீன் குஞ்சுகள் வாங்கி அணைக்கட்டில் விட்டு வளர்க்கத்தொடங்கினர். தற்போது அணையில் நீர் குறைந்ததால் மீன் பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோபால்பட்டி, சாணார்பட்டி, மேட்டுகடை, கொசவபட்டி, அஞ்சுகுளிப்பட்டி மற்றும் வெளி மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்டு ஊத்தா மீன்பிடி கருவியைக்கொண்டு அணையிலிருந்து மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, பாப்லெட், குரவை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. ஒவ்வொரு மீனும் 1 கிலோ முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

மீன் பிடி பிரியர்கள் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ முதல் 15 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்ததால் மீன்களை மகிழ்ச்சியுடன் அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி