அய்யலுாரில் குவிந்த பந்தய சேவல்கள்

81பார்த்தது
அய்யலுாரில் குவிந்த பந்தய சேவல்கள்
தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் நேற்று விற்பனைக்கு வந்த பந்தய சண்டை சேவல்களின் விலை தலா ரூ. 30 ஆயிரம் வரை இருந்தது. வடமதுரை அய்யலுாரில் வியாழக்கிழமைகளில் நடக்கும் வாரச்சந்தை ஆடு, கோழி விற்பனை என தனி அடையாளம்பெற்றது. தீபாவளி வியாழக்கிழமை வந்ததால் சந்தை ஒருநாள் முன்னாக நேற்றே கூடியது. இதனால் வியாபாரிகள் பலரும் நேற்றுமுன்தினம் இரவு முதலே ஆடு, நாட்டுக்கோழிகள், சண்டை சேவல்களுடன் குவிந்தனர். இரவு முழுவதுமே வியாபாரம் நடந்தது. இங்கு ஏராளமான பந்தய சேவல்கள் விற்பனைக்காககொண்டு வரப்பட்டிருந்தது.

தலா ரூ. 30 ஆயிரம்வரை அதன் விலை இருந்தது. வியாபாரிகள் கூறுகையில் ''பந்தய சேவல் விஷயத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவோர் பலர் உள்ளனர். இதே வகை சேவல் சண்டை பந்தயங்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் பரவலாக நடக்கிறது. இவற்றை வாங்க அதிகமாக வெளிமாநில வியாபாரிகளும் வருகின்றனர். இதனால் வடமதுரை சுற்றுப்பகுதியில் பகுதியில் பந்தய சண்டை சேவல் வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. ஒரு வீட்டில் பத்து சேவல்களை வளர்த்து பயிற்சி தந்தால், ஆறே மாதங்களில் ரூ. 1. 50 லட்சம் வரை எளிதாக லாபம் சம்பாதிக்க முடியும்''என்றனர்.

தொடர்புடைய செய்தி