திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் 20 டன் குட்கா பறிமுதல் முருக பவனம் குப்பை கிடங்கில் வைத்து அளித்தனர்.
தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்ட போதும், வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து குடோன் கடைகளில் பதுக்கி வியாபாரிகள் ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் குட்கா, புகையிலை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. திண்டுக்கல் மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி அதிரடி சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், கொடைக்கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை , வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு கடைகள், குடோன்களில் இருந்து சுமார் 20 டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம். தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை அளிக்க முடிவு. முருக பவனத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் அதிகாரிகள் முன்னிலையில் 20 டன் குட்கா பொருட்கள் எந்திரம் மூலம் அளிக்கப்பட்டது.