திண்டுக்கல்: தொற்று நோய் பரவும் அபாயம்

66பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளைவார்டுகளைக் கொண்ட மாநகராட்சி ஆகும். தற்போது தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாத நிலையில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 40 வது40வது வார்டு பூச்சி நாயக்கன்பட்டி, பேகம்பூர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மகப்பேறு மருத்துவமனை, ஆரம்ப தொடக்கப்பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கூடிய குடிநீர் தேக்கத் தொட்டி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் குப்பைகள் சேகரிக்கும் மையத்தை மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருவதால் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படக்கூடிய அவல நிலைஅவலநிலை காணப்படுகிறது. பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் குப்பை சேகரிக்கும் மையத்தை மாற்ற சொல்லியும் இதுவரை செவிடன் காதில் ஊதிய சங்கைசங்கைப் போல் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் துவக்கப்பள்ளிதொடக்கப்பள்ளி அமைந்துள்ள சுற்றுச்சூவர்சுற்றுச்சுவர் முழுவதும் குப்பைகளில் இருந்து ஏற்படக்கூடிய துர்நாற்றத்தால் பள்ளி குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி