திண்டுக்கல்: அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

64பார்த்தது
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில்
நடைபெற்றது கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழகத் துணைப் பொதுச் செயலாளருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகையில்.

சொத்து வரிகள் உயர்வை கண்டித்து கிழக்கு மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் வருகின்ற 8ந்தேதி தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். தொடர்ந்து நிர்வாகத் திறன் அற்ற ஸ்டாலின் ஆட்சியில் சொத்து வரி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் சொல்லென துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர், சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவருமான, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் தலைமைக் கழகத்தில் இருந்து புதிய கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுச் சென்றுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட கழக உறுப்பினர்களிடம் வழங்கும் பணியினை விரைந்து நிர்வாகிகள் முடிக்க வேண்டும் என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி