திண்டுக்கல்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சுகந்தி தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தும் நீதி மன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை, கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன உற்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் முபாரக் அலி உட்பட திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி