போதை ஆசாமியால் தலைக்குப்புற கவிழ்ந்த கார்

3977பார்த்தது
கொடைக்கானல் செம்மண் மேடு பகுதியில் போதை ஆசாமியால் தலைக்குப்புற கவிழ்ந்த கார் காயங்களுடன் உயிர் தப்பிய ஓட்டுனர்.

கொடைக்கானலிற்கு நேற்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வந்துள்ளார். இதனால் போக்குவரத்து சாலைகள் மாற்றப்பட்டுள்ளது. இச்சூழ் நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் 4 மணி அளவில் அப்சர்வேட்டரியில் இருந்து லேக் செல்லும் செம்மண் மேடு எனப்படும் பகுதியில் கார் விபத்துக்குள்ளானது. ஜஸ்டின் என்பவர் காரை மது போதையில் ஓட்டியுள்ளார்.

மது போதையில் ரோட்டோரத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் மீது ஏரி காம்பவுண்ட் சுவரில் இடித்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இச்சம்பவம் அறிந்து கொடைக்கானல் காவல்துறையினர் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை ஓட்டி வந்த ஜஸ்டின் காயங்களுடன் உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்தி