புறம்போக்கு நிலத்தினை மீட்டு தரக்கோரி மனு

78பார்த்தது
கீரனூர் பொதுமக்களுக்கு சொந்தமான களத்து புறம்போக்கு நிலத்தினை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் பொதுமக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கோவில் பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மதியம் 12: 30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் கிராமத்தில் ஏழு பிரிவினருக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட கோவில்கள் ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோவிலுக்கு வெளியூர் நபர்கள் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கீரனூர் பொதுமக்களுக்கு சொந்தமான களத்து புறம்போக்கு நிலத்தினை சுமார் 6 ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு வருகின்றனர்.

மேலும் விவசாயத்திற்கு செல்லும் பொது மக்களையும் கோவில் வழியாக செல்லக்கூடாது என்றும், மேலும் ஸ்ரீ வன துர்க்கை அம்மன் கோவிலுக்கு யாருக்கும் தெரியாமல் வெளியூரை சேர்ந்த ஐந்து நபர்கள் சேர்ந்து அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கீரனூர் காவல் நிலையத்திலும் பழனி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐந்து நபர்களால் கீரனூரில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒற்றுமையை சீர் வழக்க செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி