ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா

74பார்த்தது
திண்டுக்கல் ஆலமரத்துப்பட்டி அண்ணாமலையார் மில்ஸ் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் பரிவார தெய்வங்களான ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஜல துர்க்கை அம்மன், ஸ்ரீ கற்பகாம்பாள், சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி, சமேத சீனிவாச பெருமாள், ஸ்ரீ மேகநாத குரு, ஸ்ரீ கிரகலட்சுமி, ஸ்ரீ காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று(செப்.8) நடைபெற்றது.

இதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமம் லட்சுமி பூஜை நவக்கிரக ஹோமம் கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை முதல் கால யாகசாலை பூஜை மற்றும் மூர்த்திகள் கலச ஸ்தாபனம் பூர்ணாகதி ஆகியவை நடைபெற்றன. இன்று மூன்றாம்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா பூர்ணா குதி நடைபெற்றது. பின்னர் கட புறப்பாடு நடைபெற்றது.

108 திருக்கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு ஓம் சக்தி ஓம் சக்தி என பக்தர்களின் கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி