பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

59பார்த்தது
பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்றன. இதோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் குரூப் 4 போட்டித் தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வில், மாவட்டம் முழுவதும் 45ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இந்த தோ்வுக்காக மாவட்டத்தின் 10 வட்டங்களிலும் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஊரகப் பகுதிகளிலும் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததால், புகா் பேருந்துகள் மட்டுமன்றி ஊரகப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டன.

மதுரையிலிருந்து சேலம், ஈரோடு மாா்க்கமாக இயக்கப்படும் பல பேருந்துகள், திண்டுக்கல் நகருக்குள் வருவதை தவிா்த்து புறவழிச்சாலை வழியாக இயக்கப்பட்டன. இதனால் சேலம், ஈரோடு மாா்க்கமாக செல்ல வேண்டிய பயணிகள், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, கோவை, காரைக்குடி, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி