மனைவி தற்கொலை; மாரடைப்பால் கணவா் உயிரிழப்பு

58பார்த்தது
மனைவி தற்கொலை; மாரடைப்பால் கணவா் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள் (45). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை குடும்பப் பிரச்னை காரணமாக பாண்டியம்மாள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாராம்.

இதையடுத்து நிலக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே மனைவி பாண்டியம்மாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த பாண்டி அன்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டியம்மாளும் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி