திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி. மு. க. சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் காமாட்சி முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் ராஜப்பா வரவேற்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு சிறப்புரையாற்றி கட்சி ஆக்க பணிகள் குறித்து அமைச்சர்கள் ஐ பெரியசாமி, அர. சக்கரபாணி மாவட்ட கழக செயலாளர் செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் உள்ளிட்டோர் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் ராஜாமணி, நாகராஜன், மார்க்கெட் மேரி, பொருளாளர் சத்தியமூர்த்தி, மேயர் இளமதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிவகுருசாமி, நெடுஞ்செழியன், வெள்ளிமலை மற்றும் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.