தமிழகத்தில் செப்., 1-ம் தேதி முதல் உயரும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கசாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.