தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ன் ஒரு பகுதியாக மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களு க்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் நேற்று மாலை அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல் 2024- ன் ஒரு பகுதியாக மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்குக்கான பயிற்சி வகுப்பு இன்றைய தினம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவுறுத்தப் பட்டது.
வாக்குச்சாவடிகளிலுள்ள அடிப்படை வசதிகள்(AMF) குறித்து ஆய்வு செய்து உரிய படிவத்தில் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளைப் பற்றியும் வாக்கு பதிவு மையங்களைப் பற்றியும், கடந்த கால தேர்தல் தொடர்பான விவரங்களையும் சேகரித்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும், தேர்தலில் எவ்வித புகார்களும் ஏற்படாதவாறு மண்டல அலுவலர்களின் பணிகள் இருக்க வேண்டும்
தேர்தலை எவ்வித குறை பாடுமின்றி நடத்துவதற்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.