IND vs BAN Test: 3வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

77பார்த்தது
IND vs BAN Test: 3வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டமும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்டம் கான்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆனால், அங்கு விட்டுவிட்டு பெய்துவரும் மழையால் மைதானம் ஈரமாக உள்ளதால் அதனை சீராக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசாமல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி