பென்னாகரம்: திரௌபதி கோவிலில் பக்தர்கள் சவுக்கடி நேர்த்திகடன்

61பார்த்தது
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி அருகே அமைந்துள்ளது துரோபதி அம்மன் கோயில். இந்தக் கோயில் 800 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்தாகும். தமிழகத்தில் பஞ்சபாண்டவர்களுக்கு என கோயில்கள் விழாக்கள் என்பது குறைவு. ஆனால் தமிழகத்திலேயே பஞ்ச பாண்டவர்களுக்கென ஒரு தனி கோயில் அதற்கு வருடம் வருடம் விழா எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி பஞ்சாயத்து கே அக்ரஹாரம் கிராமத்தில் துரோபதி அம்மன் மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கு இன்று விழா எடுக்கப்பட்டது.

இதில் பஞ்சபாண்டவர்கள் ஆன துரோபதி. தருமன். அர்ஜுனன். நகுலன். சகாதேவன். தேரோட்டி ஜல்லி. மற்றும் கிருஷ்ணன். மகாபாரதத்தில் வருகின்ற நபர்கள். உருவ சிலைகளை எடுத்துக்கொண்டு அக்ரஹார வீதியில் உலா வந்து இறுதியாக விநாயகர் கோவில் முன்பு நின்று.
இந்த விழாவிற்கு வந்தவர்கள் நூற்றுக்கணக் கான மக்கள் மற்றும் பக்தர்கள். தங்கள் நேர்த்திக் கடனை செலுத்த சாட்டையால் கைகளிலும் மற்றும் உடல்களிலும் அடி வாங்கிக் கொண்டனர். இது தங்களுடைய முன்னோர்களான பஞ்சபாண்டவர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக கூறி சாட்டையில் அடி வாங்கிக் கொண்டனர். இதில் சிறியவர்கள், பெண்கள் முதியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி