பாப்பிரெட்டிப்பட்டி: மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இன்று (பிப்.21) மாவட்ட செயலாளர் நவீன்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் தேசிய கல்வி கொள்கை ஏற்கும் வரையில் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரமுடியாது என்று கூறிய மத்திய அமைச்சரை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் நிர்வாகிகள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி