தர்மபுரி மாவட்டம் முத்தானூர் அருகே உள்ள எம். தாதம்பட்டி அரசு பள்ளியில் நேற்று ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபால் தலைமையில், பட்டதாரி ஆசிரியர்கள் முருகேசன் முருகன், ரக்சியா, பாமக பழனிசாமி, ஆகியோர் முன்னிலையில் நேற்று பிப்ரவரி 20 மாலை நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும் மேலும் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் பேச்சு, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.