தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் உள்ள வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் தர்மபுரி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பிப்ரவரி 25, பருத்தி ஏலம் நடந்தது இங்கு தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 55 விவசாயிகள் ஆர்சிஎச் & டிசிஎச் பருத்திகள் 170 மூட்டைகள் கொண்டு வந்தனர் மேலும் ஏலத்தில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் 7, 116 முதல் 7, 616 வரையும் டிசிஎச் ரக பருத்தி குவிண்டால் 9, 050 முதல் 9, 119 வரை என 5. 20 லட்சத்திற்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.