தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் நேற்று மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் பல்வேறு நலத்திட்ட உதவிகள்பிமற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகாமையில் நேற்று மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.