காவல்துறை சார்பில் இருசக்கர வாகனங்கள் 7. 53 லட்சத்துக்கு ஏலம்

1060பார்த்தது
காவல்துறை சார்பில் இருசக்கர வாகனங்கள் 7. 53 லட்சத்துக்கு ஏலம்
தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் தர்மபுரியில் உள்ள போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஏலம் விடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தர வின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோரது மேற்பார்வை யில், பொதுமக்கள் முன்னிலையில் 58 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. அரசு சார்பில் இந்த வாகனங்களு க்கு மொத்தம் 4 லட்சத்து 6 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான மெக்கானிக்குகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர். இந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் ஜி. எஸ். டி. உள்பட ரூ. 7 லட்சத்து 53 ஆயிரத்து 872-க்கு ஏலம் போனது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி