தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற மற்றும் வெற்றிலை விற்பனைக்காக பிரத்தியேகமான வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் அக்டோபர் 13 நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.
தொடர் மழையின் காரணமாக வெற்றிலை வரத்து சரிந்து காணப்பட்டது. 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 8000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 16 ஆயிரம் ரூபாயில் வரை விற்பனையானது மேலும் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மூட்டைக்கு 2000 ரூபாய் குறைந்து விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.