தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே திண்டலானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி வயது 70 விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இன்று நவம்பர் 13 காலை தண்ணீர் பாய்ச்சி விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கடத்தூர் சாலை ஆற்று பாலம் அருகே அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணபதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கடத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.