விநாயகர்சதுர்த்தி விழா அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை கூட்டம்

58பார்த்தது
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் விதமாக, விநாயகர் சிலைகளை கரைக்ககூடிய இடங்கள் மற்றும் சுற்றுசூழல் பாதிக்காத வண்ணம் நீர்நிலைகளில் கரைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அலுவலர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனவே, களிமண்ணால் செய்யப்பட்டதும் தெர்மா கோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது மாற்றாக சுற்றுச்சூழலுக்கு நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள வாணியாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை, கேசர்குளிஹல்லா அணை, தென்பெண்ணையாறு, ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களில் மட்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படியும் கரைக்க அனுமதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி