மாநில அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

85பார்த்தது
தமிழ்நாடு செஸ் சங்கம், தர்மபுரி மாவட்ட செஸ் சங்கம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா செஸ் அகாடமி இணைந்து நடத்தும் 30-வது மாநில அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் தர்மபுரி பென்னாகரம் மெயின் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் 121 அணிகளைச் சேர்ந்த 510- க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள், பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி நிறுவனங்களின் தலைவர் டி. என். சி. இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன், ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டிகளுக்கான இயக்குனரும், சங்க மாநில இணை செயலாளருமான ராஜசேகரன் முன்னிலையில் அணிகள் தேர்வு செய்யப்பட்டுபோட்டிகள் நடைபெற்றது.

இதில் சிவகாசி அணி முதலிடமும், சென்னை அணி இரண்டாம் இடமும், சேலம் அணி மூன்றாம் இடமும் பிடித்தது. இந்த போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிக்கு ரூ. 10, 000 ரொக்க பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை தேசிய செஸ் சங்க முன்னாள் செயலாளர் ஹரிகரன், தர்மபுரி மாவட்ட சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேகர் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி