நகரமன்ற தலைவர் தலைமையில் பெரியாருக்கு திமுகவினர் மரியாதை

65பார்த்தது
தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி தர்மபுரி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் திருவருவுச்சிலைக்கு தர்மபுரி திமுக நகர கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சார்பில் நகர கழக செயலாளர் நாட்டான் மாது தலைமையில் பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது உடன் மற்றும் தர்மபுரி நகராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தங்கமணி நகர்மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மாவட்ட இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் குமார் நிர்வாகிகள் காசிநாதன் முல்லைவேந்தன் ராஜா சந்திரமோகன் ரவி தங்கராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி