அரூர்: வார சந்தையில் 48 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

70பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிநாதம்பட்டி அடுத்ராடு புளுதியூரில், வாரந்தோறும் புதன் கிழமை கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வார சந்தை நடைபெற்று வருவது வழக்கம் நேற்று பிப்ரவரி 19 நடைபெற்ற சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அந்தை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் 8, 200 முதல் 42, 500 வரையும், ஆடுகள் 4, 500 முதல் 8, 800 வரை 48 லட்சத்திற்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி