அரூர்: உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்; எம்எல்ஏ கோரிக்கை

68பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் அருகே உள்ள வெதரம்பட்டியில் நேற்று பிப்ரவரி 24 மணி அளவில் வெடிமருந்து குடோன் வெடித்து மூன்று பெண்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் நிலையில் நேற்று மாலை இது குறித்து தகவல் அறிந்த அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வெடி விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், இவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குடோன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு செய்தியாளர் சந்திப்பில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி