இன்று தமிழகமெங்கும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலி அம்மாள் அவர்களின் 64 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று பிற்பகல் தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் அஞ்சலை அம்மாள் அவர்களின் 64 வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தாபா. சிவா தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அஞ்சலை அம்மாள் உருவப்படத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து வீரவணக்க கோஷங்கள் எழுப்பினர்.