தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்படும் பசுமை மாணவர் படை வன பாதுகாப்பு குழு சார்பில், தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்கு உட்பட்ட தீர்த்தமலை, தீர்த்தகிரீஸ்வரர் கோவில், மலைப்பாதை பகுதியில் இன்று பிப்ரவரி 21 காலை பசுமை படை மாணவர்கள், ஆசிரியர் வேலு தலைமையில் தீர்த்தமலையில் உள்ள மரங்களை பாதுகாக்கும் பொருட்டு மரங்களின் அவசியம் குறித்தும், தீர்த்தகிரீஸ்வரர் மலை கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அங்கு மரங்களின் பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.