தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக வார சந்தை நடைபெறுவது வழக்கம். பிப்ரவரி 14 நேற்று நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.
நேற்றைய சந்தையில் ஆடுகளின் அளவு மற்றும் தரத்திற்கு தகுந்தவாறு 5,200 முதல் 9,500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஆடுகள் விற்பனை நடந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் 28 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.