ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாத தாக்குதலால் நாட்டுக்காக இன்னுயிர் நீத்த 40 CRPF வீரர்களுக்கு இன்று பிப்ரவரி 14 நாடெங்கிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் சூழலில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார். உடன் முன்னால் ராணுவ படை வீரர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.