தர்மபுரி: பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் செயற்குழு கூட்டம்

54பார்த்தது
தர்மபுரி: பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் செயற்குழு கூட்டம்
பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் தருமபுரி மின் திட்டத்தின் செயற்குழு கூட்டம் செட்டிக்கரை RPRS மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தருமபுரி திட்ட செயலாளர். s. ரங்கதுரை தலைமை தாங்கினார். திட்ட தலைவர் C. சேகர், பொருளாளர் V. சிவன். அரூர் கோட்ட செயலாளர், L. தசரதன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்ட பி. எம். எஸ் பேரவை செயலாளர். ஞானசேகரன் சிறப்பு உரை ஆற்றினார். இதில் நாகராஜன், முருகன் , காளிதாஸ் மாதவன், வேடியப்பன், ஜெயராமன் , மலையப்பன் , முருகேசன், சேகர் ஆகிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 01. 12. 2023 முதல் நடைமுறை படுத்த வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம். வேலைபளு ஒப்பந்தம், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டியும், நிறுத்தி வைத்துள்ள பதவி உயர்வுகள் வழங்க வேண்டியும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது பராமரிப்பு செய்வது போன்றவற்றை தனியாரிடம் வழங்காமல் மின் வாரியமே செயல்படுத்திட வேண்டும் என்பவை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள், அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக திவாகர் நன்றி உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி