தர்மபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று பிப்ரவரி 17 நடைபெற்ற பருத்தி ஏலத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான அரூர் மொரப்பூர் பாப்பிரெட்டிப்பட்டி நரிப்பள்ளி சிட்லிங் கோட்டப்பட்டி கோபிநாதம்பட்டி மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 126 விவசாயிகள் 465 பருத்தி முட்டைகளை விற்பனைக்கு எடுத்து வந்தனர் இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் 6, 026 ரூபாய் முதல் 7, 669 வரையில் ஏலம் போனது மேலும் நேற்று 11 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனதாக கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள் அறிவழகன் தெரிவித்துள்ளார்