தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மொரப்பூர் ஒன்றியம் பன்னியக்குளம் ஊராட்சியில் தொடர்ந்து பொதுமக்கள் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு வேண்டி கோரிக்கை வைத்திருந்த நிலையில் பன்னியக்குளம் ஊராட்சி, திப்பம்பட்டி கூட்ரோட்டில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3. 80 இலட்சம் மதிப்பீட்டில் 5, 000 லிட்டர் நீர் தேக்க தொட்டி, பைப்லைன் அமைக்கும் பணிக்கு இன்று பிப்ரவரி 18, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மொரப்பூர் ஒன்றிய கழக செயலாளர் M. K. மகாலிங்கம் தலைமை வகித்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.