தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், அரூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. புது பொலிவுடன் தயாராக உள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டுமென தமிழக சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் மனு அளித்துள்ளோம். எனவே அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் இருந்தனர்.