தர்மபுரி அருகே உள்ள தடங்கம் பகுதியில் தர்மபுரி மாட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுஒழிப்பு மாநாட்டை நடத்த உள்ளார். அதனை பாஜக வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த மாநாட்டிற்கு திமுகவை அழைத்தார்களா அல்லது அவர்களாகவே செல்கிறார்களா என தெரியவில்லை.
இந்த மாநாட்டிற்கு திமுக அழைக்காமலே சென்றால் திருமாவளவனை அவமானபடுத்த போகிறார்கள். திமுகவை அழைத்திருந்தால் திருமாவளவனை ஏமாற்ற போகிறார்கள். பாஜக இந்திய சுந்திர வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறது. அப்படி மாற்றி எழுதினால் திமுக போராட்டத்தை வீரியத்துடன் கையிலெடுக்கும் என துரைமுருகன் கூறியுள்ளார். இதில் தர்மபுரி பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் பொதுச் செயலாளர் ஐஸ்வரியம் முருகன் மற்றும் மகளிரணி வழக்கறிஞர் சங்கீதா ஆகியோர் உடன் இருந்தனர்