கிராமத்தில் திரும்பும் திசை எங்கும் மரண ஓலங்கள்

2251பார்த்தது
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதால் ஒட்டுமொத்த கிராமமே அழுகை குரலோடு காணப்படுகிறது. வேடப்பன், ஆதிகேசவன், இளம்பருதி, விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின் உள்ளிட்டோர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் ஆறு பேர் 22 வயதுக்குட்பட்டவர்கள். என்பதால் கிராமத்தில் திரும்பிய திசை எங்கும் கிராம மக்களின் அழுகுரலாக கேட்டு கொண்டு உள்ளன. இளைஞர்களின் உயிரிழப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

தொடர்புடைய செய்தி