கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த 2 பெண்கள் கைது

56பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கிராமத்தில் வசிக்கும் உயர் சமூகத்தை சேர்ந்த புவனேஸ்வரன் மனைவி தரணி, என்ற பெண்ணும் தரணியின் மாமியார் சின்னத்தாயும் கூலி வேலைக்குச் சென்ற போளையம்பள்ளி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான்கு பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்து அவமானப்படுத்தினர். இது குறித்து லோக்கல் ஆப்பில் செய்தி வெளியிடப்பட்டது இதன் எதிரொலி மற்றும் இன்று பாதிக்கப்பட்ட செல்லி, (50) என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், தலைமையில் விசாரணை மேற்கொண்டு
தரணி, மற்றும் சின்னத்தாய், மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 - ன் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி