கோயம்புத்தூரில் இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்குவந்த காரில் இளம்பெண் ஏற முயன்றார். இதனைப் பார்த்த தாய், மகளின் முடியைப் பிடித்தவாறு காரின் பின்னால் ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் காரை மறித்து அதில் இருந்த இளைஞர்களை இறக்கினர். அப்போது, காரில் இருந்து இளைஞரும், அப்பெண்ணும் காதலிப்பதாகவும் வீட்டார் சம்மதிக்காததால், தப்ப முயன்றது தெரியவந்துள்ளது.