நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் படம் "இட்லி கடை". இப்படத்தில் ராஜ் கிரண், அருண் விஜய், நித்தியா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் இந்த மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனையடுத்து படத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது, அதனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.